மழை வெள்ள சேதம்... அவசர எண்கள் அறிவிப்பு... மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

 
புயல் கடற்கரை மழை புயல் கடற்கரை மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வருகிற 20ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு மேல் காற்றின் வேகம் தாறுமாறாக மாறும் சூழ்நிலை உருவாகி வருவதால், இந்த காலகட்டத்தில் கடல்சார் நடவடிக்கைகள் ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை

இந்நிலையில், மீனவர்கள் பாதுகாப்பை முன்னிட்டு உடனடி முன்னெச்சரிக்கை அறிவிப்பை புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ளவர்கள் தாமதமின்றி கரை திரும்ப வேண்டுமெனவும், அடுத்த சில நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இயக்குநர் முகமது இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார். திடீர் சூறாவளி காற்று, அதிர்வுள்ள அலைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதால் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மழை

மேலும், மழை மற்றும் வெள்ளச் சம்பவங்கள் தொடர்பான அவசர புகார்களை 1077, 1070, 112 அல்லது 9488981070 ஆகிய எண்களில் பொதுமக்கள் பதிவுசெய்யலாம் எனவும் புதுச்சேரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!