ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு... 33 பேர் பலி!

 
ஆப்கன்

 என்ன தான் தொழில் நுப்ட வளர்ச்சியும், விஞ்ஞானமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் இயற்கை மிஞ்ச எதுவும் இல்லை. இதனை நிரூபிக்கும் வகையில் இயற்கை சீற்றங்கள் நிகழ்வதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அடிக்கடி  வெள்ளம், பூகம்பம், பனிச்சரிவு, நிலச்சரிவு மற்றும் வறட்சி போன்ற   இயற்கைப் பேரழிவுகளுக்கு ஆளாகி வருகிறது. அத்துடன் மழை மற்றும் பனிப்பொழிவும் உண்டு.

ஆப்கன்

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த  3  நாட்களாக ஏற்பட்ட பனி, மழை  அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 33 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கன்


இது குறித்து  இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர்   “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம், பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வெள்ளத்தில் இதுவரை 606 வீடுகள் சேதம் அடைந்துள்ள. சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!