மேகவெடிப்பால் பெருக்கெடுத்த வெள்ளம்... 4 பேர் பலி..12 பேர் மாயம்!

 
மேகவெடிப்பு
 


 
உத்தரகண்ட் மாநிலத்தில்  உத்தரகாசி மாவட்டத்தில், இன்று ஆகஸ்ட் 5ம் தேதி திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து  தாராலி உட்பட  மலைக்கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.  
கீர் கங்கை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு இருப்பதால்  அப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.  இதுவரை சுமார் 4 பேர் பலியாகி இருப்பதாகவும்  முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகவெடிப்பு
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 20 - 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன், 10 - 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகி இருப்பதாக  உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேகவெடிப்பு

இது குறித்து, வெளியான வீடியோக்களில், திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.  இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்து தற்போது வரை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ராணுவக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?