நகரம் முழுவதும் சூழ்ந்த வெள்ளம்.. பலமணி நேரம் சுவரின் மீது நின்றபடி போராடிய குதிரை!

 
பிரேசில் குதிரை

பிரேசிலில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழைக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 136 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மறுபுறம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

வீடுகளில் வெள்ளத்தில் சிக்கிய 1.65 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குதிரை வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் கட்டிடத்தின் மேல்தள சுவரில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.

போர்டோ அலிகார் பெருநகரப் பகுதியான கனோவாஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் குதிரையால் நிற்க முடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தது, சுவர் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. குதிரை உயிர் பிழைக்கும் என்ற நம்பிக்கை இல்லாத சூழலில், மீட்புக் குழுவினருக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது. சமூக வலைதளங்களில் கேரமெலோ என நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப்படும் குதிரை, உயிர்காக்கும் படகு உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web