5,00,000 பூக்கள்... டிஸ்னி வேர்ல்ட்... ஃப்ளவர் டவர்ஸ் ஊட்டியில் குவிந்த மக்கள்... மிரள வைக்கும் மலர் கண்காட்சி!

 
ஊட்டி மலர் கண்காட்சி

கொளுத்துகிற வெயிலில் பலரும் மலை வாசஸ்தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்று 5 லட்சம் பூக்களுடன் மிக பிரம்மாண்டமாக துவங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி. ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி இன்று காலை துவங்கி மே 20ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான 5 லட்சம் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன.

இன்கா சாமந்தி, பிரெஞ்ச் சாமந்தி, பிளாக்ஸ், பெட்டூனியா, பான்சி, டயந்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரான்குலஸ், வயோலா, ஏஜெரேட்டம், காலெண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பல்வேறு வகையான பூச்செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

45 ஆயிரம் தொட்டிச் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை கவரும் வகையில் இவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், பல லட்சம் ரோஜாக்கள், கார்னேஷன்கள், செவ்வந்தி பூக்களை கொண்டு பிரமாண்டமான டிஸ்னி வேர்ல்ட், காளான், ஆக்டோபஸ், ஃப்ளவர் டவர்ஸ் உள்ளிட்ட 10 வகையான மலர் அலங்காரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கார்னேஷன் உள்ளிட்ட பூக்கள் பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், ஆயிரக்கணக்கான மலர்களால் 10 அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மலர்களால் பல்வேறு ரங்கோலிகள், மலர் அலங்காரங்கள், மலர் கோபுரங்கள் அமைக்கப்படும். மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web