நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு... பயணிகளிடம் வாக்குவாதம் செய்தால் நடவடிக்கை!!

 
ஓட்டுனர் நடத்துனர்

மாநகர பேருந்துகளில் நடத்துநர்கள் மீது  தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையிலும் பேருந்தில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும்  போக்குவரத்துத்துறை அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாணயம், நடத்துனர்

அதில், “மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது. பயணிகள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதித் தொகையை வழங்க வேண்டும்.இதற்காகத் தான் பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு   முன்பணம்  வழங்கப்படுகிறது.

ஓட்டுனர் நடத்துனர்

இதனை பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும். பயணிகளிடத்தில் சில்லறை குறித்து  விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.  சில்லறை பெறுவதில் வாக்குவாதம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web