முதியோர் உதவித்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படை... தவித்த வங்கி ஊழியர்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வேட்பாளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம். தேர்தல் பறக்கும் படை அதிகாரி சூர்யா தலைமையிலான அதிகாரிகள் வாணியம்பாடி அருகே தேவஸ்தான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் பணிபுரியும் மணிகண்டன் என்பவர் முதியோர்களுக்கு "முதியோர் உதவித்தொகை’ வழங்கி வந்தார். இதையடுத்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் மணிகண்டன் வைத்திருந்த 1 லட்சத்து 22 ஆயிரத்து 150 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விசாரித்த கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். விசாரணையில் மணிகண்டன் யூனியன் வங்கி ஊழியர் என்பதும். அவர் முதியோர் உதவித்தொகையை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. பின்னர், யூனியன் வங்கி ஊழியர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து, அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை வங்கி ஊழியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
