கண் கருவிழிப் பதிவின் மூலம் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள்!

 
ரேஷன்

 தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயோமெட்ரிக் முறையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக  உணவுப்பொருள் வழங்கல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரியாக தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை.

ரேஷன்

இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்  90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது

கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

ஆகஸ்ட் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவது உட்பட  பல்வேறு காரணங்களுக்காக புதிய ரேஷன் கார்டு கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்து நீண்ட நாள்களாக காத்திருப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web