கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்...!!

 
கர்ப்பிணிகள்

சாதாரணமாக இருக்கும் பெண்களை காட்டிலும் கர்ப்பிணிகளுக்கு கால்சியமும், இரும்புச்சத்தும் 2 மடங்கு அதிகம் தேவையாக இருக்கிறது.இதனால் கர்ப்பம் தரித்தவுடன் மருத்துவர்கள் போலிக் ஆசிட் மாத்திரைகள் பரிந்துரை செய்கின்றனர்.  கர்ப்பிணிகளுக்கு  பொதுவாக வாந்தியும், குமட்டலும் 70 சதவீதம் பேருக்கு   உண்டு . இதுவே சற்று அதிகமானாலும் நீரிழப்பு ஏற்பட்டு  உடல் பலவீனம் அடையும்.  கோடை காலத்தில் இந்த வகையான நிலை  சற்று மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும் அபாயம் உண்டு. இதனால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

கர்ப்பிணி
அஜீரணம், வாயு தொல்லை,  வயிறு உப்புசம், பசியின்மை  காரணமாக  உணவு வயிறு, குடல் மற்றும் உணவு குழாய்களில் மெதுவாகச் செல்லும். மேலும் குடல் தசைகளில் தளர்வும் சுருக்கமும் ஏற்படும். இதனால் நெஞ்சரிச்சலும் ஏப்பமும் ஏற்படும்.    சில கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு பாதம் மற்றும் கால்களில் நீர் கோர்த்துக் கொள்ளும். சிலருக்கு கர்ப்ப கால இறுதி வாரங்களில் கால்கள் நீர் கோர்த்து வீங்கிவிடும். இதுவே கோடை காலமாக இருந்தால்  மிகுந்த அசௌகர்யத்தை கொடுக்கும்.

எனினும், அதிகப்படியான வீக்கம் அல்லது திடீரென பாதம், கால்கள், விரல்கள் மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகலாம்.  குழந்தை வளர வளர, வயிறு பெரிதாகும்; இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.  அதுவும் படுத்திருக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமம்.  சாதாரணமாக உள்ளவர்களை விட கர்ப்பிணி பெண்களின் உடலில் 1-1.5 லிட்டர் ரத்தம் கூடுதலாக இருக்கும்.  இத்தகைய பெண்கள் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்:

கர்ப்பிணி

அடிக்கடி உடல் வெப்பநிலை அதிகரிப்பதை கர்ப்பிணி பெண்கள் உணர்ந்திருப்பார்கள். வெப்பத்தை சமாளிக்க ஒரே வழி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரோ அல்லது நீர் ஆகாரமோ, பழச்சாறோ, அதிகமான நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளையோ அடிக்கடி சாப்பிட வேண்டும்.  அத்துடன் , தங்களது உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் சூப் சேர்த்துக்கொள்ளலாம்.   குளிர்ச்சியான நீரில் குளிக்கலாம். இதனால்  புத்துணர்ச்சியாக இருக்கும்.   முதலில் பாதம், கால்கள், அப்புறம் கைகள் என தண்ணீர ஊற்றி கடைசியாக வயிற்றில் ஊற்றுங்கள். குளிக்கும் போது வயிற்றை நன்றாக மசாஜ் செய்வது உத்தமம். வசதியாக உள்ள ஆடைகளை அணிய வேண்டும்.

 கர்ப்பிணி பெண்கள் மிதமான உடற்பயிற்சி செய்யலாம். இதனால் தசைகள் மற்றும் தசைநார்கள் கொஞ்சம் விரிவடைய உதவும் பயிற்சியில் ஈடுபடலாம். அப்போதுதான் உங்கள் உடல் எடை கூடினாலும் சோர்வு ஏற்படாது.  நடைபயிற்சியும் அவசியம் தான்.  கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். அதிலும்  காலை உணவு முழுமையானதாகவும், சத்துள்ளதாகவும், சக்தியை தருவதாகவும் இருக்க வேண்டும்.  ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிடுவது சிறந்தது.  அதில் 2 வேளைகளாவது  பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.  தினமும் பகலில் 2  முறை    காற்றோட்டம் நன்றாக வரும் இடத்தில் தூங்கலாம். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web