கால்பந்து ஜாம்பவான் காலமானார்.... ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
ராபர்ட்

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன். இவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது   மரணத்திற்கான காரணம்  குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ராபர்ட் சார்ல்டன் 1966 FIFA உலகக் கோப்பையை வென்ற ENG அணியில் முக்கிய வீரராக இருந்தவர்.

 

ராபர்ட்

 

இங்கிலாந்துக்காக 106 போட்டிகளில் விளையாடி 49 கோல்கள்  அடித்து பெருமை சேர்த்தவர்.  மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்காக 758 போட்டிகளில் 249 கோல்கள் அடித்துள்ளார். 1968ல் ஐரோப்பிய கோப்பையை வென்றவர்.  உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமானவராக சார்ல்டன் இருந்து வந்தார். மேன்செஸ்டர் யூனைடெட் கிளப் அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முதன்முறையாக அந்த அணி ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் தொடரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்.

கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற மூனிச் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சார்ல்டன், அடுத்தடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். அவரது மறைவிற்கு, ஃபிஃபா, ஐரோப்பிய கால்பந்து யூனியன், உள்ளிட்ட சர்வதேச கால்பந்து அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web