126 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக 820 ரன்கள் குவித்து சாதனை!

 
820 ரன்கள்


 
இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணியும் துர்ஹம் அணியும் ஜூன் 29 முதல் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் போட்டிங் செய்த சர்ரே அணி 820/9 ரன்கள் குவித்துள்ளது. இந்த அணியின் தொடக்க வீரர் டோம் சிப்லி 305 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.  

இந்த அணியில் சாம் கர்ரண், டான் லாரன்ஸ், வில் ஜாக்ஸ் ஆகிய மூவரும் அவர்கள் பங்கிற்கு சதம் அடித்து அசத்தினர்.  சர்ரே அணி முதல் இன்னிக்ஸில் 161.3 ஓவர்களில் 820/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்ததாக துர்ஹம் அணி 33 ஓவர்களில் 62/1 ரன்கள் எடுத்துள்ளது.
126 ஆண்டு வரலாற்றில் சர்ரே அணியின் அதிகபட்ச இலக்கு 820 இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 811 ரன்கள் எடுத்திருந்தது.  கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்‌ஷ்ரி அணி 1986ஆம் ஆண்டு 887 ரன்கள் அடித்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாமல் முதலிடத்தில் இருக்கிறது. சர்ரே அணி இந்த வரிசையில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கமாக விளையாடும் டியூக் பந்து இல்லாமல் இந்தமுறை கூக்கபுரா பந்தில் விளையாடினார்கள்.

இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டி

 அது ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது உதவும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. லண்டல் வெய்யிலில் இந்தப் பந்து பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை அளித்துவிட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?