வரலாற்றில் முதல்முறை.. ஆணாக மாறிய பெண் ஐஆர்எஸ் அதிகாரி.. அங்கீகரித்த மத்திய அரசு!

 
எம். அனுகதிர் சூர்யா

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் எம்எஸ்எம் அனுசுயா. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் லா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு (2023) சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் துறையில் முதுகலை பட்டயப் படிப்பையும் முடித்தார்.

தற்போது, ​​அவர் ஹைதராபாத்தில் உள்ள மத்திய கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றக் கோரி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வருவாய்த் துறையிடம் மனு அளித்துள்ளார்.

இதை பரிசீலித்த மத்திய நிதி அமைச்சகம், அவரது கோரிக்கையை ஏற்று நேற்று (ஜூலை 9) உத்தரவு பிறப்பித்தது. அதில், “ஹைதராபாத் செஸ்டாட் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ் எம்.அனுசுயா, தனது பெயரை திரு.எம்.அனுகதிர் சூர்யா என்றும், பெண்ணிலிருந்து ஆணாக மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார். .

கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, இனிமேல், அனுசுயா அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் 'மிஸ்டர் எம். அனுகதிர் சூர்யா' என்று அங்கீகரிக்கப்படுவார். இதன் மூலம், இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில்  பெண் ஆணாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐஆர்எஸ் அதிகாரி என்ற பெருமை அனுகதிர் சூர்யாவுக்கு உண்டு.

முன்னதாக 2015 ஆம் ஆண்டில், ஒடிசாவில் வணிக வரி அதிகாரி ஒருவர் தனது பாலினத்தை பெண் என்றும், அவரது பெயரை ஐஸ்வர்யா ரிதுபர்ணா பிரதான் என்றும் மாற்றினார். அதனையடுத்து தற்போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web