நடுரோட்டில் முறைப்பெண்ணைக் கடத்த முயற்சி... 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

 
 பூங்கொடி - சுப்ரமணி

என்ன தான் முறைப்பெண் என்றாலும், பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்காமல், நடுரோட்டில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவியை கடத்த முயற்சி செய்து தாயும், மகனும் அதிர வைத்திருக்கிறார்கள். சினிமா பாணியில் நடுரோட்டில் மாணவியை வழிமறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றிருக்கிறார்கள். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்ன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி பூங்கொடி (54). மகன் சுப்ரமணி (29). அரசிராமணியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் வசித்து வருபவர் பூங்கொடியின் அண்ணன் சிவக்குமார். ஒன்றுவிட்ட சகோதரர்களான இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனால் இரு வீட்டாரும் பேசிக் கொள்ளவில்லை.

சிவகுமாரின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு முடிந்து விடுமுறையில் மாணவி வீட்டில் இருந்து வந்துள்ளார். சிவக்குமாருக்கு உதவியாக வீட்டில் உள்ள கறவை மாடுகளிடம் இருந்து பாலை எடுத்து அருகில் உள்ள பால் மையத்தில் கொடுக்கும் பணியில் மாணவி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கடந்த மே 1ம் தேதி பால் சென்டருக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த சுப்ரமணியும், பூங்கொடியும் சேர்ந்து சுப்ரமணியை திருமணம் செய்ய வற்புறுத்தினர். ஆனால் இது குறித்து தந்தையிடம் பேசுமாறு கூறிவிட்டு சிறுமி தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்தும் நோக்கத்தில் சுப்ரமணி சிறுமியை பிடித்து இழுத்து சென்றுள்ளார்.   பூங்கொடி, சிறுமியின் சைக்கிளை அருகில் இருந்த புதரில் வீசிவிட்டு சிறுமியை காரில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி உடனடியாக வீட்டிற்குச் சென்று பெற்றோருக்குத் தெரிவித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் தலைமறைவான தாய் மற்றும் மகனை தீவிரமாக தேடி வந்தனர். இன்று சிறுமியின் அத்தை பூங்கொடி மற்றும் அவரது மகன் சுப்ரமணி இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் எடப்பாடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web