ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்... டிரைவர் கைது!
தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து உத்தரவில் வேம்பார் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த பொலிரோ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் 32 மூட்டைகளில் மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம் சிகரெட் பாக்கெட்டுகள் மொத்தம் 6,40,000 சிகரெட்கள் இருந்தன. இதன் மதிப்பு மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும். இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் கந்தசாமி இராஜேஷ் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
