அசத்தல் டான்ஸ்... ஒயிலாட்டம் கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி!
கோவை மாவட்டத்தில் நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105வது அரங்கேற்ற விழா, நல்லூர்வயல் பகுதியில் உற்சாகத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தார்.
விழாவில் கலைஞர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். எஸ்.பி. வேலுமணிக்கு கலைஞர்களும், பொதுமக்களும் உற்சாகமான வரவேற்பு அளித்து, விழாவுக்கு பொலிவு சேர்த்தனர்.விழாவின் முக்கிய அம்சமாக, கலைஞர்கள் எஸ்.பி.வேலுமணியை தங்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட வேலுமணி கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டத்தில் கலந்து கொண்டு, அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.
இந்த விழா, கலை குழுவின் திறமையையும், உள்ளூர் மக்களின் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தாக கூறுகின்றனர். சங்கமம் கலை குழுவின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை மறக்க முடியாத ஒரு தருணமாக மாற்றிக்காட்டினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
