வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைதண்டனை விதித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் 3 பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக பங்களாதேஷின் முக்கிய ஆங்கில நாளிதழான டாக்கா ட்ரிப்யூன் கூறியுள்ளது.
ஹசீனாவுடன் சேர்ந்து, அதே அவமதிப்பு தீர்ப்பின் கீழ், கைபந்தாவில் உள்ள கோபிந்தகஞ்சைச் சேர்ந்த ஷகில் அகந்த் புல்புலுக்கும் 2 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. புல்புல், டாக்காவைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் மற்றும் அவாமி லீக்கின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீக் உடன் தொடர்புடையவர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் வங்கதேச அரசு ஹசினாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த கோரிக்கை விடுத்துள்ளது .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!