முன்னாள் மத்திய அமைச்சர் மனைவி காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிவசங்கர். இவரின் மனைவி லட்சுமி பாய் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 94. சிவசங்கர் முன்னாள் ஆளுநரும் ஆவார். காங்கிரஸ் தலைவரும் மூத்த அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் நிபுணருமான டாக்டர் வினய் குமார் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

வயது மூப்பு உட்பட பல்வேறு காரணங்களால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.லட்சுமி பாய் ஒடிசாவை சேர்ந்த முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் புகழ்பெற்ற வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் தாய் வழி மருமகளும் ஆவார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
