முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கவலைக்கிடம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
எஸ்.எம்.கிருஷ்ணா

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த பா.ஜ.க. தலைவருமான திரு. எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு வயது 92. 

கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில், பெங்களூருவின் தனியார் மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நலம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் எடியூரப்பா விஜயேந்திரா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

எஸ்.எம்.கிருஷ்ணா

இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து நேற்று முன் தினம் இரவு மருத்துவமானையில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு மருத்துவ உபகரணங்களின் உதவியால் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக , மருத்துவர் சுனில் காரந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர், எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல்நிலைக் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. 
இந்நிலையில், அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றமடையாமல் மேலும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடமும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்களிடமும் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web