முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் தகனம்.. பிரதமர் மோடி நேரில் அஞ்சலி!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஷிபு சோரன். இவர் ஜார்க்கண்ட்டின் தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.இவர் நீண்டகாலமாக கிட்னி தொடர்பான பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் ஜூன் 24 ம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த ஷிபு சோரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவிற்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், ஷிபு சோரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹர் மாவட்டம் நிம்ரா கிராமத்தில் ஷிபு சோரனின் உடல் இன்று தகனம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிச்சடங்கில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
