இன்று காலை ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சௌதாலா காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
ஓம்பிரகாஷ்
 ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா குருகிராமில் காலமானார். அவருக்கு வயது 89. ஹரியானா மாநிலம் குருகிராமில் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் மரணமடைந்ததாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

இந்திய தேசிய லோக் தளம் (INLD) தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 89வது வயதில் இன்று காலை குருகிராமில் காலமானார். ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் மரணமடைந்தார் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

ஓம்பிரகாஷ்

ஓம் பிரகாஷ் சவுதாலா கடைசியாக இந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பின் போது பொதுவில் காணப்பட்டார். சிர்சாவின் சவுதாலா கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த போது அவர் காணப்பட்டார்.இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா என்பதும், ஹரியானாவின் ஏழாவது முதல்வராக பதவி வகித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

2022ம் ஆண்டு மே 27ம் தேதி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் பழமையான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சவுதாலா, டெல்லியின் திகார் சிறையில் 87 வயதான மூத்த கைதியாக தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2020ல் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஓம்பிரகாஷ்

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மனைவி சினே லதா ஆகஸ்ட் 2019ல் இறந்தார். சௌதாலாவுக்கு அபய் சிங் சவுதாலா மற்றும் அஜய் சிங் சவுதாலா உட்பட 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.மகன் அபய் சிங் சௌதாலா ஹரியானாவின் எல்லனாபாத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரன், துஷ்யந்த் சவுதாலா, ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் ஹரியானாவின் துணை முதல்வராக பதவி வகித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!