முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் தலைநகர் டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். இவர் தற்போது பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்ததால் காரணமாக மருத்துவமனையில் வழுக்கி விழுந்தார். இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் இன்று மீண்டும் சத்யேந்தர் ஜெயின் திடீரென வழுக்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அடிபட்டதில் அவரது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக அவர் கடந்த வாரம் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மீண்டும் இன்று தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது இடுப்பில் பெல்ட் அணிந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 35 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளார். தற்போது சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் விரைவில் குணமடையவும், நலம்பெறவும் பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். சத்யேந்தர் ஜெயின் ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் அவரது உடல்நிலை குறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆளும் கட்சியான பாஜக அவரை கொல்ல முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ” சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்படுவதற்கு முன்பு அதிக உடல் எடையுடன் இருந்ததாகவும், இப்போது எடை குறைந்து சரியான அளவில் இருப்பதாகவும்” பாஜக தெரிவித்துள்ளது.இந்த பதில் ஆம் ஆத்மி தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தற்போது ஆம்ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்து வருகிறார். கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். 2017ல் இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐவழக்கு பதிவு செய்தது. இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன்படி சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சத்யேந்திர ஜெயினை அதிரடியாக கைது செய்தது.
2022ல் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆம்ஆத்மி அரசுக்கு கெட்டப்பெயரை உருவாக்கவே சத்யேந்திர ஜெயினை கைது செய்ததாகவும் ஆம்ஆத்மி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!