முன்னாள் தென்கொரியா பிரதமர் கைது... பெரும் பரபரப்பு!

 
தென்கொரியா

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், ஊழல் விசாரணையை தவிர்க்கப் பயனப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். எதிர்க்கட்சிகள் இதை அதிகார துஷ்பிரயோகம் என குற்றம் சாட்டியதையடுத்து அந்த பிரகடனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டதால் அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்; புதிய அரசு பதவியேற்று ஆட்சியைப் பொறுப்பேற்றது.

அதிபர் பதவியில் இருந்தபோது எடுத்த முடிவுகள் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் யூன் சுக் இயோல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நாட்டின் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

South Korea protests
 

இதே வழக்கின் விரிதொடர்பாக, அவசரநிலை பிரகடனத்தை ஆதரித்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகியோரும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத அரசியல் தலையீடு குறித்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!