முன்னாள் சபாநாயகர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

 
kannan

புதுச்சேரி அரவிந்த வீதியில் வசித்து வந்தவர்  கண்னன். இவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.  கண்ணன் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது  74.கண்ணன் மாநிலங்களவை எம்.பி உட்பட அரசியலில்  பல  முக்கிய பதவிகளை வகித்தவர்.  காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  அதிலிருந்து  வெளியேறி  மூப்பனாரின்   தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

kannan

அக்கட்சியின்   புதுச்சேரி மாநில தலைவராக இருந்தார்.  கட்சி தொண்டர்களால் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்ட கண்ணன், புதுச்சேரி அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர்.  எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட கண்ணன்   தற்போது புதுச்சேரி அரசியலில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.   2016 சட்டமன்ற தேர்தல் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி   பாஜகவில் சேர்ந்தார். ஆனால் சிறிது காலத்திலேயே பாஜகவில் இருந்தும் விலகிய அவர் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்து முழு  ஓய்வு பெற்றார்.

kannan

 நவம்பர் 1ம் தேதி சுவாச கோளாறு, குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை  காரணமாக   ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நுரையீரல் தொற்று இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தது.  முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உள்துறை அமைச்சர் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். இந்த சூழலில் நேற்றிரவு 9.51 மணிக்கு கண்னன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட   பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web