அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்... உலக தலைவர்களின் இரங்கல்!
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மற்றும் குடியரசுக் கட்சியின் முக்கிய மூத்த தலைவரான டிக் செனி கடந்த திங்கட்கிழமை இரவு காலமானார். நிமோனியா மற்றும் இதய செயலிழப்பு காரணமாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு தீவிரமடைந்த நிலையில் அவர் மறைந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 84 வயதான செனி, கடந்த காலங்களில் 5 முறை மாரடைப்பு ஏற்பட்டும் சிகிச்சை பெற்று மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 முதல் 1993 வரை ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ஆட்சியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றிய செனி, அந்த காலகட்டத்தில் ஈராக் மீது அமெரிக்கா போர்தொடங்கிய முக்கிய முடிவுகளில் பங்காற்றியவர். பின்னர், 2001 முதல் 2009 வரை ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சியில் துணை அதிபராக இருந்து, ‘அதிகாரமிக்க துணை அதிபர்’ என அழைக்கப்பட்டார். செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலுக்கு பின் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை வடிவமைப்பில் அவர் பெரும் தாக்கம் செலுத்தினார்.

குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து அவர் வைத்திருந்த விமர்சனங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. “அமெரிக்க வரலாற்றில் குடியரசுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தவர் டிரம்ப்” என்று செனி பல முறை வெளியே தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸுக்கு வாக்களித்ததாகவும் அவர் பொது மேடையில் அறிவித்திருந்தார்.
டிக் செனியின் மறைவுக்கு அமெரிக்க அரசியல் வட்டாரங்களும், முன்னாள் அதிபர்கள், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க பாதுகாப்புக் கொள்கையில் தீர்க்கமான பாதை அமைத்த அரசியல்வாதியாக அவர் நினைவு கூறப்படுகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
