4 ஆண்டுகளில் 47 பேர் மரணம்.. கேரளாவை அதிர வைக்கும் தெரு நாய்கள்!

 
நாய்

கேரளாவில் கடந்த 2020 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில் ரேபிஸ் இறப்பு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்டது. இதில், கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் வெறிநாய்க்கடியால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தகவல் சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் 9 பேரும், கண்ணூரில் 5 பேரும் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளனர். திருச்சூர் மற்றும் கோழிக்கோட்டில் தலா 4 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதேபோல் எர்ணாகுளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாத இறுதியில், ஆலுவாவில் தெருநாய் கடித்து பெரும்பாவூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.

வெறி நாய் 

இதேபோல் களமசேரியில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். பின்னர் நாய் இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் நாய் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்டாலும், வெறிநாய்க்கடியால் உயிரிழப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web