4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
விரார் நகரில் உள்ள இந்த குடியிருப்பில் 50 வீடுகள் இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து, அருகிலுள்ள காலியான குடியிருப்பின் மீது விழுந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
எனினும் விபத்துக்குள்ளான கட்டிடம் நெரிசலான பகுதியில் அமைந்துள்ளதால் மீட்பு பணிகளுக்கு கனரக இயந்திரங்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

விபத்து நடந்த பல மணி நேரத்துக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 24 வயது இளம் பெண், அவரது ஒரு வயது பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் புதைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
