போலி ஆவணங்களை தயாரித்து மோசடி.. இந்திய மாணவரை நாடு கடத்த அமெரிக்கா உத்தரவு!

 
பெத்லகேம் பல்கலைக்கழக

இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த் (வயது 19) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பெத்லகேம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆர்யன் ஆனந்தின் கல்விக் கட்டணத்திற்கான முழு உதவித்தொகை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், லெவிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்காக ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஆர்யன் ஆனந்த் தனது உயிருடன் இருக்கும் தந்தைக்கு போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்து பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடிகள் அனைத்தும் ‘ரெடிட்’ என்ற சமூக வலைதளத்தில் வெளியான பதிவின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ``பொய்யால் என் வாழ்க்கையைக் கட்டமைத்துள்ளேன்'' என்ற தலைப்பில் வெளியான பதிவில், போலி ஆவணங்களுடன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி? இது தொடர்பான அனைத்து விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பதிவை பதிவிட்டவர் தனது பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், அந்த பதிவை வெளியிட்ட நபர் பெத்லஹேம் லெவிரா பல்கலைக்கழகத்தைப் பின்தொடர்வதைக் கண்டறிந்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இந்த விஷயத்தைப் புகாரளித்துள்ளனர்.பின்னர் அந்த பதிவை வெளியிட்டவர் இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்ததையடுத்து, அவரது சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்தது.

இதையடுத்து ஆர்யன் ஆனந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில், மோசடி மற்றும் சேவைகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆர்யன் ஆனந்துக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், ஆனால் நீதிமன்றம் அவரை பல்கலைக்கழகத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கோரியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web