திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி!

 
மோசடி
 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு ரூ.8 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் நம்மாழ்வார் நகரை சேர்ந்த சிலுவைராஜ் மகள் அமலபுஷ்பம் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பீல்டு மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், பணகுடியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமலபுஷ்பம் கணவரை பிரிந்து குழந்தையுடன் கோவில்பட்டியில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு, தனியார் வங்கியில் பீல்டு மேலாளராக பணியாற்றி வரும் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் கரண்குமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இருவரும், கடந்த 2020ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து கோவில்பட்டி ராஜீவ் நகரில் தனியாக வீடு எடுத்து திருமணம் முடிக்காமல் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, அமல புஷ்பத்தை திருமணம் செய்வதாக கூறி, சுமார் ரூ.8 லட்சத்தை கரண்குமார் வாங்கினாராம்.

இதற்கிடையில், அமலபுஷ்பம் 5 முறை கருவுற்று கோவில்பட்டியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தாராம். தற்போது அமல புஷ்பத்தை திருமணம் செய்ய முடியாது என்றும், பணத்தையும் திருப்பி தர முடியாது என்றும் கூறி கரண்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அமலபுஷ்பம் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கரண்குமாரை தேடி வருகிறார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!