திரைப்பட உதவி இயக்குநர் லட்ச கணக்கில் மோசடி... போலி நகைகளை அடகு வைத்தது அம்பலம்!

 
நாச்சியப்பன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி சாலையில் தனியார் நகை அடகு கடை உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் நகைகளை அடகு வைக்க வந்தார். நகைகளை சோதனை செய்ததில் அவை போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேலாளர் வினோத் உடனடியாக குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருப்புத்தூரைச் சேர்ந்த நாச்சியப்பன் (43) என்பதும், தற்போது சென்னையில் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் தமிழகம் முழுவதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாச்சியப்பன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரின்ஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, உடந்தையாக இருந்த சென்னையை சேர்ந்த தமிழ்வாணன், கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார், காரைக்குடியை சேர்ந்த ராஜகோபால், ராமசாமி, பினு, ஆலப்புழாவை சேர்ந்த சுபாஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 147 கிராம் போலி நகைகள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். டிஎஸ்பி பிரகாஷ் கூறுகையில், "சென்னையில் சினிமா உதவி இயக்குனராக உள்ள நாச்சியப்பன். காரில் சென்று தனியார் அடகு கடைகளை குறிவைத்து போலி தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அவரது கும்பல், சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள வங்கியிலும் அடமானம் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web