சென்னையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்!

 
செயற்கை கருத்தரிப்பு மையம்

 சமீபகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து கருத்தரிப்பு மையங்களை நாடி வருகின்றனர். இந்த குறையை தீர்க்க தமிழக அரசு சென்னை எழும்பூர் தாய் சேய் அரசு நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். சுமார் 6.97 கோடி மதிப்பில் இந்த செயற்கை கருத்தரிப்பு மையம் உருவாக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

செயற்கை கருத்தரிப்பு மையம்

பொதுவாக இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது  செயற்கை கருத்தரிப்புக்காக  ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையிலேயே செயற்கை கருத்தரிப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.  எழும்பூர் மருத்துவமனையைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரிப்பும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web