குழந்தைகளுக்கான இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்!

 
மருத்துவ முகாம்
 

 

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், திருநெல்வேலி ராயல் மருத்துவமனை  சார்பில் கோவில்பட்டி ஏ.வி மேல்நிலைப்பள்ளியில் நேற்று குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ்,சாலை பாதுகாப்பு பிரிவு சேர்மன் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். முகாமினை ஏவி மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய நிபுணர் மருத்துவர் ராம் கிஷோர் முகாமில் கலந்து கொண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகள், இருதய அடைப்பு, மூச்சுத் திணறல் உள்ள குழந்தைகளுக்கு எக்கோ, ஈஜிசி உள்பட இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

இதில் குழந்தைகள் நல மருத்துவர் துரை பத்மநாபன்,சின்னச்சாமி பிரபாகரன், ரெட் கிராஸ் மோகன்ராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன்,பாபு, நாராயணசாமி,வீராச்சாமி,முத்து முருகன், ராஜ்குமார், ராஜேந்திரன், பூல்பாண்டி, நடராஜன், மாரியப்பன், பழனிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!