ஜூலை 12 கடைசி... யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி... உடனே அப்ளை பண்ணுங்க!

 
யுபிஎஸ்சி

 தமிழகத்தில் தலைநகர் சென்னையில்  அசோக் நகர் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமியில்  யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர விண்ணப்பிக்க  ஜூலை 12ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  சென்னை அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.  

யுபிஎஸ்சி

பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள், வாராந்திர, மாத, ஆண்டு மாதிரி தேர்வுகள், வசதியான ஸ்டடி ஹால், தேவையான நூல்களைப் பயன்படுத்த நூலகம் அனைத்தும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதங்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பயிற்சியில் சேர இருபாலரும் விண்ணப்பித்து பயனடையலாம்.

யுபிஎஸ்சி

பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 12, போட்டித் தேர்வுக்கான தேதி ஜூலை 14. போட்டித் தேர்வு பாடத்திட்டம் மே 2023 முதல் மே 2024 வரையிலான நடப்பு நிகழ்வுகளில்  இருந்து கேள்விகள் கேட்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு  9363923451 மற்றும் 9500481074 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியில் சேர https://forms.gle/wr9eyHeoKmRy6Etw5 இணையதளம் மூலமாகவும்  பதிவு செய்யலாம் எனக்  கூறப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web