6 மாநிலங்கள்... 234 தொகுதிகளிலும் மாஸ் காட்டும் விஜய்...! ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
விஜய்

மே 28ம் தேதி உலகம் முழுவதும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும்  நடிகர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவசமாக மதிய உணவு வழங்க நடிகர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்  மூலம் 28ம் தேதி காலை 11 மணி முதல் இலவச உணவு வழங்கப்படும் . அத்துடன்  தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா  மாநிலங்களிலும் மதிய உணவு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விஜய்

உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஏழைகளின் பசியைப் போக்கும் வகையில் விழிப்புணர்வுக்காக, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 'தளபதி ஒரு நாள் மதிய உணவு சேவையகம்'  திட்டம் மூலமாக ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்க வேண்டும் என ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் "விஜய் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்படும்

விஜய் ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்!  HBD விஜய் ஸ்டார்ட்ஸ்!

மே 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி முதல் தமிழகத்தில்  உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் என அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வரும் ஏழை எளியோருக்கு ஒரு வேளை உணவு வழங்க வேண்டும் .  தமிழகம் மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா  மாநிலங்களிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இந்த நலப்பணியை மேற்கொள்கிறது" என தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web