சூப்பர்.. . எத்திராஜ் கல்லூரியில் ஆட்டோ ஓட்டுனர் மகளுக்கு இலவச சீட்!

 
பூங்கோதை

 தமிழகத்தில் மாநிலவழிக் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர். சென்னையில் வசித்து வரும்  ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன்  மகள் பூங்கோதை. சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த பூங்கோதை  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 578 மதிப்பெண்கள் எடுத்து  மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து மிகவும் சிரமப்பட்ட போதும் தன் முழு விடாமுயற்சியால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

எத்திராஜ் கல்லூரி சேர்மன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விருப்பமான துறையை தேர்வு செய்து படிக்க தான்  முழு உதவியும் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.இதன் பேரில் மாணவி பூங்கோதை, எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரனை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பிறகு  பேசிய பூங்கோதை, “தந்தை மிகவும் கஷ்டப்பட்டுதான் என்னையும், எனது அக்காவையும் படிக்க வைத்து வருகிறார். இந்த கடினமான குடும்ப சூழ்நிலையில் இக்கல்லுரியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்று இருக்கும் மாணவிகளுக்கு, நான் எதிர்காலத்தில் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை இந்த உதவி எனக்குள் விதைக்கிறது. எனக்கு சிஏ படிக்க விருப்பம் உள்ளது. தற்போது எத்திராஜ் கல்லூரி அளித்துள்ள வாய்ப்பு மூலம் பி.காம் படிப்பில் நிர்வாக வணிகவியல் மேலாண்மை துறை படிக்க  உள்ளேன்” என்றார். 

தேர்வு
இது குறித்து எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரன், ”அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு கல்லூரியில் அவர்கள் விரும்பும் துறையில் சீட் அளித்து முழு கல்லூரி கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகமே செலுத்தி வருகிறது.  அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு இச்செயல்  ஊக்குவிப்பாக இருக்கும். இதே போல் மற்ற தனியார் கல்லூரிகளும் ஒரு சீட்டாவது வழங்கினால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.  மாணவி பூங்கோதை நன்றாக படித்து இக்கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web