இலவச தையல் இயந்திரம்... யாருக்கு எல்லாம் விண்ணப்பிக்க தகுதி... கலெக்டர் தகவல்!

 
தையல் இயந்திரம் டைலர்

முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய /மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்ட தகுதியானவர்கள் இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம்.

தையல் இயந்திரம் டைலர்

முன்னாள் படைவீரர் பிறப்பால் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். படைவிலகல் சான்றில் தையல் இயந்திரம் கோரும் பயனாளியின் பெயர் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மத்திய /மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெற்றவராக இருத்தல் கூடாது.  பயனாளியின் அதிகபட்ச வயது 40-க்குள்  இருக்க வேண்டும்.

தையல் இயந்திரம் டைலர்

முன்னாள் படைவீரரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0462-2901440) தொடர்பு கொண்டு விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?