பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்.. புதுச்சேரியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

 
 பிரான்ஸ் நாடாளுமன்றம்

ஜூன் 9ஆம் தேதி பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் இன்றும் ஜூலை 7ம் தேதியும் 2 சுற்றுகளாக நடைபெறுகிறது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஆசிய நாடுகளுக்கான 577 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று இந்தியாவிலும் டெல்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க புதுச்சேரி, சென்னை, காரைக்காலில் 4 வாக்குச்சாவடி மையங்கள் புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தால் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 4,550 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆசிய நாடுகளின் தொகுதிக்கான முதல்கட்ட தேர்தலில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web