வெள்ளி இந்த ஷேர்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க அள்ளித்தர வாய்ப்பாம் !!

 
பங்குச்சந்தை


நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 310.88 புள்ளிகள் அல்லது 0.49% சரிந்து  62,917.63 ஆக இருந்தது. நிஃப்டி 50 குறியீடு 67.80 புள்ளிகள் (0.36 சதவிகிதம்) இழந்து 18,688.10 ஆக இருந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 0.96 சதவிகிதத்தையும், நிஃப்டி 1.04 சதவிகிதம் அதிகரித்ததும். ஒட்டுமொத்த சந்தை உள்ளூர் குறியீடுகளை வென்றிருக்குறது. எஸ்&பி பிஎஸ்இ மிட்-கேப் குறியீடு 0.30 சதவிகிதம் முன்னேறியது, அதே நேரத்தில் எஸ்&பி பிஎஸ்இ ஸ்மால்-கேப் குறியீடு 0.12 சதவிகிதம் மட்டுமே முன்னேறியது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளானா வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2023 அன்று இந்த டிரெண்டிங் பங்குகளை உன்னிப்பாகக் கவனியுங்கள் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள் :
GR Infraprojects : நேற்று, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) திட்டத்திற்கான மிகக் குறைந்த ஏலத்தில் நிறுவனம் பெயரிடப்பட்டதை அடுத்து, பங்குகள் சுமார் 2.13 சதவிகிதம் உயர்ந்தது ஒரு பங்கின் விலை ரூபாய் 1272.60 ஆக இருக்கிறது.

பங்குச்சந்தை

1,085.47 கோடி மதிப்பிலான திட்டம், உத்தரபிரதேசத்தில் காஸ்கஞ்ச் புறவழிச்சாலையிலிருந்து சந்தன் நகர் வரையிலான NH 530ன் ஹைப்ரிட் வருடாந்திர நான்கு வழிப்பாதைக்காக இந்த ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது.Solara Active Pharma : அதிக வர்த்தக அளவு காரணமாக நேற்று ஆரம்ப வர்த்தகத்தில் பங்கு சுமார்  9.80 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. வர்த்தகத்தின் இறுதியில் பி.எஸ்இ-யில், பங்குகளின் விலை முந்தைய முடிவில் இருந்து 5.46 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 376.60 ஆக நிறைவு செய்தது.
PNC இன்ஃப்ராடெக் : ஜூன் 15ம் தேதி பிற்பகலில் பங்குகள் சுமார் 4.11 சதவிகிதம் உயர்ந்து  ரூ 331.65 ஆக இருந்தது, தனியார் சமபங்கு நிறுவனமான KKRன் இணை நிறுவனம் ஆக்ராவை தளமையிடமாகக்கொண்ட நிறுவனத்துடன் சுமார் 9,000 கோடி ரூபாய்கு 12 சாலை திட்டங்களை கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புரளி பரவியதே ஏற்றத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. வர்த்தக்த்தின் இறுதியில் 1.62 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 323.70ல் நிறைவடைந்தது.

பங்குச்சந்தை


Aurionpro சொல்யூஷன்ஸ் : நேற்று, ஐடி நிறுவனத்தில் தீவிர முதலீட்டாளர் சுமீத் நாகரின் மலபார் இந்தியா ஃபண்ட் 1.15 ஹோல்டிங்கை வாங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, ஜூன் 15 அன்று, பங்குகள் 5 சதவிகிதம் அப்பர் சர்க்யூட்டில் ரூபாய் 1,005.15ல் முடிந்தன. ஜூன் 14 அன்று, மலபார் இந்தியா ஃபண்ட் 2.63 லட்சம் பங்குகளை அல்லது 1.15 சதவிகித பங்குகளை சராசரியாக ரூபாய் 880.23 என்ற விலையில் திறந்த சந்தை பரிவர்த்தனையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பாராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் : CRISIL ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் வங்கி வசதிகள் மீதான அதன் மதிப்பீடுகளை ‘CRISIL BBB+/Positive/CRISIL A2’ இலிருந்து ‘CRISIL A-/Stable/CRISIL A2+’ ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில், இப்பங்கு 2.61 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இப்பங்குகளை இன்று உன்னிப்பாக கவனித்தால் காசு பார்க்கலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web