மண்பெண்ணிடம் அத்துமீறிய மாப்பிள்ளையின் நண்பர்கள்... போதையில் அட்டகாசம்... மணமகள் செய்த அதிர்ச்சி சம்பவம்!

 
நின்று போன திருமணம்

கிருஷ்ணகிரியில் நண்பர்களால் நின்ற கல்யாணம்: மணமகள் முடிவால் மாப்பிள்ளை அதிர்ச்சி
மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன். திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என்று அதிரடியாக கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விடிந்தால் திருமணம் என்கிற நிலையில் இருவீட்டாரும் உறவினர்களையும், நண்பர்களையும் வரவேற்பதில் மும்முரமாக இருந்தனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வரும் வாலிபருக்கும் திருமணம். 6 மணிக்கு தொடங்கிய வரவேற்பு நிகழ்ச்சி இரவு 9.30 மணி வரை சந்தோஷமாக நடந்தது. அதன்பிறகு டீஜே என்றழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் தொடங்கியது. அப்போது அங்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள், மது போதையில் மேடை மீது ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையையும் அவர்கள் மேமடைக்கு ஏற்றி ஆட வைத்தனர். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. தலைக்கேறிய போதையில், அவர்களில் சிலர் மணபெண்ணையும் மேடைக்கு வருமாறு வற்புறுத்தி குரல் எழுப்பினர்.

தனக்கு இதுபோன்று நடனமாடி பழக்கம் இல்லை என்றும், பொது இடங்களில் நான் இதுபோன்று நடனம் ஆட விரும்பவில்லை என்றும் மணப்பெண் கூறியதையும் சட்டைசெய்யாத அவர்கள், தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

இந்நிலையில், அப்படி எல்லாம் எங்கள் வீட்டு பெண் ஆட வரமாட்டாள் என்று மணப்பெண்ணின் உறவினர்கள் வாலிபர்களை கண்டித்தனர். அதை சொல்ல நீங்கள் யார் என்று மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளின் உறவினர்களுடன் திடீரென கைகலப்பில் ஈடுபட்டது அந்த இடத்தில் பரபரப்பாக்கி கைகலப்பாக முற்றியது.

5வது திருமணம்

இதைப் பார்த்த மணபெண், மாப்பிள்ளையின் குடிகார நண்பர்கள் தனது உறவினர்களைத் தாக்கியதை நினைத்து, இனி இந்த மாப்பிள்ளையை கட்ட மாட்டேன்., திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என்று கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசி எறிந்தார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

திருமணத்தில் கலந்துக் கொள்ள மண்டபத்திற்கு மறுநாள் காலையில் வந்தார்கள், மண்டபம் பூட்டப்பட்டு வெறிச்சோடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். இதில் கொடுமையான விஷயம், விடிந்ததும் மதுபோதை தெளிந்த பிறகு தான் மாப்பிள்ளைக்கும், அவரது நண்பர்களுக்கும் அவர்கள் செய்த தவறே தெரியும் என்றும், அதன்பிறகு அவர்கள் உணர்ந்து என்ன பயன் என்ற  சோகத்தில் மணமகனின் உறவினர்கள் பேசியபடி கலைந்து சென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?