தனிமையில் உல்லாசம்.. திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு நேர்ந்த சோகம்!

 
பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமானவரைக் காதலிக்க துவங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். அதன் பின்னர் இருவரும் தனிமையில் அவ்வப்போது லாட்ஜிற்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென தன்னைத் திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்திய நிலையில், காதலன் மறுத்துள்ளார். திருமணத்திற்கு மறுத்த இன்ஸ்டாகிராம் காதலன் வீட்டில் நீதி கேட்டு காதலி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 23 வயது பெண். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அக்‌ஷய்குமார் (28) என்பவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது.

காதல்

இருவரும் அடிக்கடி தங்கள் ஆசைகளை பரிமாறிக்கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருப்பதி சென்றனர். அப்போது அங்குள்ள விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த இளம்பெண், "நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று கேட்டாள். அதற்கு பதிலளித்த அக்‌ஷய் குமார், “நான் உன்னுடன் ஜாலியாக இருப்பேன்.. திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண் ஈக்காடு கிராமத்தில் உள்ள காதலன் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்‌ஷய் குமார், தான் வைத்திருந்த சாவியால் காதலியை தாக்கிவிட்டு, பெரிய கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த நந்தினி, புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அக்ஷய்குமாரை கைது செய்தனர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web