ஏ.சி. மின்சார பேருந்துகள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன? முழு விபரம்!

சென்னையில், ஏ.சி. மின்சார பேருந்துகள் எந்தெந்த பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்( எம்.டி.சி) சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது 1,225 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதில், முதல் கட்டமாக 625 மின்சார தாழ்தள பேருந்துகளுக்கான ஒப்பந்தமானது ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் போடப்பட்டு, 120 மின்சார தாழ்தள பேருந்துகளுக்கான சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வியாசர்பாடி பணிமனையில் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக இயக்கப்பட உள்ள 625 மின்சார தாழ்தள பேருந்துகளில் 225 ஏ.சி. பஸ்கள் ஆகும். இவை பெரும்பாக்கத்தில் இருந்து 55, பல்லவன் சாலையில் அமைந்துள்ள மத்திய பணிமனையில் இருந்து 100, தண்டையார்பேட்டை-1 பணிமனையில் இருந்து 25, பூந்தமல்லி பணிமனையில் இருந்து 45 ஏ.சி. பஸ்கள் என பிரித்து இயக்கப்பட உள்ளன.
இதே போல 2வது கட்டமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் 600 மின்சார தாழ்தள பேருந்துகளில் 400 ஏ.சி. பேருந்துகளும், 200 ஏ.சி. அல்லாத பேருந்துகளும் அடங்கும். இந்த 400 ஏ.சி. பேருந்துகளும் ஆலந்தூர் பணிமனையில் இருந்து 80, மத்திய பணிமனை 2-ல் இருந்து 80, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து 40, பெரம்பூர் பணிமனையில் இருந்து 80, ஆவடியில் இருந்து 60, அய்யப்பன் தாங்கலில் இருந்து 60 ஏ.சி. பேருந்துகள் என்று பிரித்து இயக்கப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!