அதிகாலையில் பரபரப்பு... நடுரோட்டில் பழ வியாபாரி வெட்டி படுகொலை!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்கின்ற ஹரிஹரன் இவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பழம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலையில் வியாபாரத்திற்காக பழங்கள் எடுப்பதற்கு தனது டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் திருச்சியில் இன்று காய்கறி, பழங்களை வாங்கிக் கொண்டு ஹரிஹரன், அவரது நண்பர் ராஜமுருகன், டிரைவர் வினோத் ஆகியோர் நீடாமங்கலம் திரும்பிக் கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் அருகே வல்லம் புறவழிச்சாலையில் இவர்களது வண்டியைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர் சரக்கு வாகனத்தை வழிமறித்தனர்.

வண்டியை நிறுத்தியதும், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் டிரைவர் வினோத்தின் முதுகில் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி டிரைவர் டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தியுள்ளார். வலது பக்கம் உட்கார்ந்து இருந்த ஹரிஹரனை தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாகனத்தின் மேல் அமர்ந்திருந்த ராஜமுருகன் அலறியடித்து சத்தம் போட, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த கொலை குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் வினோத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
