சம்பளம் கொடுக்காத விரக்தி.. நீதிமன்ற வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊழியர்!
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தவர் மணீஷ் குமார் சைனி. இவருக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென நீதிமன்ற வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நீதிமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்துக்கு வெளியே சாலையை மறித்து வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவரது சகோதரர் ரவீஷ் சைனி கூறுகையில், கிளார்க் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த மணீஷ், ஐகோர்ட்டில் நிரந்தர ஊழியராக விரும்பினார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அவருக்கு தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்படி ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4.5 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அந்தப் பணமெல்லாம் போக்குவரத்துச் செலவுக்கே போகும். எனவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி ஜூனியர் கிளார்க் பணிக்கான சம்பளம் ரூ.5,00ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மணீஷ் இறந்ததையடுத்து வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். அவரது மனைவி சிமா குமார் சைனிக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
