தள்ளுவண்டி உணவு கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் ... உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு!

 
தள்ளுவண்டி

தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து வகை கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் அவசியம் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்ட உணவுகளை தள்ளுவண்டியில் தயாரித்து விற்பனை செய்பவர்கள் தவறாமல் உரிமம் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உரிமம் பெறாத கடைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆன்லைன் வசதி மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக இலவசமாக உரிமம் பெறலாம் என்றும் துறை விளக்கியுள்ளது. பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருட்கள் பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாகவும் சான்றிதழ் மிக முக்கியம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில், உரிமம் இல்லாமல் செயல்படும் தள்ளுவண்டிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டி உணவுக் கடைகளுக்கான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!