செம... ரூ9க்கு முழு சாப்பாடு... முதல்வர் தொடங்கி வைப்பு!
உத்தப்பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா வெகுவிமரிசையாகத் தொடங்கவிருக்கும் நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவையின் அடிப்படையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமுதாய கூடங்கள் மூலம் ரூ 9க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் முதற்கட்டமாக, ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வரும் யோகி ஆதித்யநாத், மருத்துவமனையில் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தன் கையால் மக்களுக்கு உணவு வழங்கினார்.
அதன்படி ரூ9க்கு பருப்பு, நான்கு சப்பாத்திகள், காய்கறி, சாப்பாடு, சாலட் ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!