சென்னையில் இன்று மாலை இறுதிசடங்குகள்... பிரபல இயக்குநர், பாடலாசிரியர் ரவிஷங்கர் தற்கொலை!

 
ரவிஷங்கர்

வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குநரும், பிரபல பாடலாசிரியருமான ரவிஷங்கர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலைச் செய்து கொண்டார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று ஜூலை 14ம் தேதி மாலை 4.30 மணியளவில் சென்னை நெசப்பாக்கம் மயானத்தில் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரவிஷங்கர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அவரது நண்பரும், எழுத்தாளருமான கல்யாண்குமார் அவரது முகநூல் பக்கத்தில் ரவிஷங்கர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், பாக்யா வார இதழ் ஆரம்பித்த புதிது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி இருந்தவர் சென்னையில் வசிக்கும் ரவிஷங்கர் என்ற இளைஞர்.

ரவிஷங்கர்

உடனே ஆசிரியர் பாக்யராஜிடம் கொடுத்து படிக்க வைத்தேன். படித்து முடித்தவர், கார் அனுப்பி அந்த இளைஞரை அழைத்து வரச் செய்தார். 
சிறுகதை பற்றி பாராட்டிவிட்டு, தன்னிடம் உதவியாளராகவும் சேர்த்துக் கொண்டார். இது நம்ம ஆளு உட்பட சில படங்கள் வேலை செய்து விட்டு, இயக்குனர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார்,  ரவிஷங்கர்.

சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் உட்பட சில பாடல்களையும் எழுதினார். பின்னர் இயக்குனராகி 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியதோடு, அதில் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். அதில் 'எங்கே அந்த வெண்ணிலா?'  என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. 

ரவிஷங்கர்
திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு கே.கே. நகரில் உள்ள தனது அறையில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர்! 

தனிமையே அவரை கொன்று விட்டதாக கருதுகிறேன். ஒரு மிகப் பெரிய இயக்குனராக அல்லது  பாடலாசிரியராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை தொலைத்துக் கொண்டார்.  போய் வாருங்கள் ரவிஷங்கர்... வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்... ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்து போனது...”

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web