இன்று இறுதிசடங்குகள்... இயக்குநர் சுசி கணேசன் மாமனார் மாரடைப்பால் மரணம்!

 
சுசி கணேசன்

இன்று, காரைக்குடியில், இயக்குநர் சுசி கணேசனின் மாமனாரும், முன்னாள் டெபிட்டி கலெக்டருமான சண்முகவேலுவின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. 

தமிழ் சினிமாவில் ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான சுசி கணேசன், அதன் பின்னர், ‘விரும்புகிறேன்’, ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ போன்ற படங்களில் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது மும்பையில் இந்தி படம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் சுசி கணேசனின் மாமனார், மும்பையில் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

சுசி கணேசன்

இந்தியில் படம் இயக்கும் பணிகள் காரணமாக இயக்குநர் சுசி கணேசன், குடும்பத்துடன் மும்பையில் தங்கியிருந்து படப் பணிகளை கவனித்து வந்தார். படப்பிடிப்புகளுக்கு சுசி கணேசன் சென்று, படப்பணிகளை கவனித்து வரும் நிலையில், மகள் மஞ்சரிக்கு துணையாக, அவரது தந்தை சண்முகவேலுவும் மும்பையில் தங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

85 வயதான சண்முகவேலு வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.  அவரது இறுதிச் சடங்குகள் இன்று காரைக்குடியில் நடைபெற உள்ள நிலையில், திரையுலகினர் இயக்குநர் சுசி கணேசனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இயக்குநர் சுசி கணேசனின் மாமனார் சண்முகவேலு , திண்டுக்கல் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web