இன்று இறுதிசடங்குகள்... பிரபல நகைச்சுவை நடிகரும்,மிமிக்ரி கலைஞருமான கலாபவன் ஹனீப் காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கலாபன் ஹனீப், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிக குறுகிய நாட்களில் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கலாபவன் ஹனீப் (58). எர்ணாகுளம் மாவட்டம் மட்டஞ்சேரியைச் சேர்ந்த கலாபவன் ஹனீப்பின் தந்தை ஹம்சா, தாய் சுபைதா. இவருக்கு வாஹிதா என்ற மனைவியும், ஷாரூக் ஹனீப், ஸித்தாரா ஹனீப் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பள்ளி நாட்களிலேயே ஹனீப், மிமிக்ரி மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பல மேடைகளில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக வலம் வந்து மக்களின் பாராட்டையும், கைத் தட்டல்களையும் பெற்றார்.
ஆரம்பக் காலகட்டத்தில் சின்னத்திரையில் நடித்துவந்தவர், 100க்கும் மேலான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 'செப் கிலுக்கண சங்ஙாதி' என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஹனீப் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஷாரூக் ஹனீபின் திருமணம் நடந்திருந்த நிலையில், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று மாலை நடிகர் ஹனீப் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு மட்டஞ்சேரியில் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!