அதிர்ச்சி... ட்ரெண்டான வாட்ஸ்-அப் குரூப்... மனைவிகளை மாற்றி உல்லாசம்.. புகார் கொடுத்த பெண் கொடூர கொலை!

 
இளம்பெண்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கணவருடன் வசித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவர், காவல்துறையில் அளித்த புகார் இந்தியாவையே அதிரவைத்தது. அப்பெண் அளித்த புகாரில், எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து துன்புறுத்தியதாகவும் அதில் கூறியிருந்தார்.

அதாவது, கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றும் கும்பல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதன்அடிப்படையில், கோட்டயம், கருகச்சால் என்ற இடத்தில் 6 பேரை கைது செய்தனர். அவர்கள் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய தீவிர விசரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

மேலும் அந்த புகாரில், தனது கணவர் சில சமூக வலைதள பக்கங்களில் உள்ள ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் உள்ளவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சந்தித்து கொள்வார்கள். அப்போது குழுவில் உள்ள ஒருவரின் மனைவியுடன் இன்னொருவர் உறவு கொள்வார்கள். அவர்கள் தங்கள் மனைவியரை மாற்றி செக்ஸ் உறவு வைத்து கொள்கிறார்கள் என கூறினார். 

இளம்பெண்

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்தது, சமூக வலைதள குரூப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் யாராவது ஒருவது வீட்டில் குடும்ப நண்பர்களை போல சந்தித்து கொள்வார்கள். குறைந்தது 3 முறையாவது இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறும். ஒருவரையொருவர் சந்தித்து நன்றாக பழகிய பிறகு உறவு கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வார்கள்.

அங்கு, ஒருவருக்கொருவர் மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாச உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் டெலிகிராம், மெசஞ்சர்களில் போலி ஐடிகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இதற்கு மனைவிமார்கள் சம்மதிக்காவிட்டாலும் வலுகட்டாயமாக உறவில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்தக் கும்பல் மெசஞ்சர், டெலிகிராம் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் உறுப்பினர்களை சேர்க்கின்றனர். இதற்காக ‘கப்பிள் மீட் அப் கேரளா’ என்ற பெயரில் ஒரு குரூப் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் குரூப்பில் கேரளா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் என்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கும்பல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் தங்களது மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்ததையும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததையும் கேட்டு அதிர்ந்தனர்.  

இளம்பெண்

இந்நிலையில் மனைவி மாற்றும் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த 26 வயது இளம்பெண், கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். வழக்கமாக காலையிலேயே எழுந்திருக்கும் பழக்கம்கொண்ட அப்பெணின் வீடு காலையில் நீண்டநேரமாக பூட்டியேகிடந்துள்ளது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து போலீசார், பெண்ணின் உறவினர்கள் அங்கு  திரண்டனர். போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி விசாரித்தனர். தனியாக வசித்துவந்த பெண்ணை கொலை செய்தது, அவரது கணவர் தான் என்றும், அவரை உடனே கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினர்.

போலீசார், பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது கணவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web