ககன்தீப் சிங் பேடி பணியிட மாற்றம்... !

 
ககன் தீப் சிங்


 
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வனத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த சுப்ரியா சாஹூ, மருத்துவத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதேபோல், மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  நீர்வளத்துறை செயலாளராக மணிவாசகம், சுற்றுச்சூழல் துறை செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக  ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வருபவர் ககன்தீப்சிங்.  1993ல் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றியவர்.  

ககன் தீப் சிங்


 2004ல் ஏற்பட்ட சுனாமியில்  கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப்பணிகள் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. சுனாமியால் வீடுகளை இழந்தவர்களை தங்க வைக்க சிறப்பு ஏற்பாடு, அறிவிக்கப்பட்ட நிவாரணப் பணிகளை அவர் செயல்படுத்திய விதம் ஆகியவை அவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தந்தன. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  அதே போல் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஒரு மாதம் கடலூர் மாவட்டத்தில்  தங்கியிருந்து  இரவு பகல் பாராமல் பணிபுரிந்தவர்.  

மிக்ஜாம் புயல்

வர்தா, ஒக்கி, கஜா புயல் பாதிப்பின் போதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ககன்தீப் சிங் பேடியே நியமிக்கப்பட்டார்.  சென்னை பெருமழை வெள்ளம் என தலைநகரில் துயரங்கள் தொடர்ந்த நேரத்தில், அவற்றிலிருந்து மக்களைக் காப்பதில் ககன் தீப் சிங் மிகச்சிறப்பாகப் பணியாற்றி மக்களிடையே வரவேற்பை பெற்றவர். எந்த துறையை கொடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.   ககன் தீப் சிங் பேடி தற்போது ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web