ககன்யான் திட்டம்.. வெற்றிப்பெற்ற 3-ஆம் கட்ட சோதனை .. குஷியில் இஸ்ரோ!

 
ககன்யான்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏவுவதற்கு தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இன்ஜின், பி.எஸ். இயந்திரம் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் ஏவப்படும் ராக்கெட்டுகளில், மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கும், பூமிக்கு திரும்புவதற்குமான  இயந்திரமான சிஸ்டம் டெமான்ஸ்ட்ரேஷன் மாடூலிங்' ($DM) இன்ஜினின் சோதனையும் பல்வேறு கட்டங்களாக இங்கு நடந்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் 3வது கட்டமாக 1,703 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. இதற்லாம கவுண்டவுன் தொடங்கிய பின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த சோதனை வெற்றிகரமாக எட்டியதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்த்தார்.

மேலும் திருவனந்தபுரம் திரவ இயக்கவியல் திட்ட மையத்தின் இயக்குநர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குநர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். ஏற்கனவே முதல் நிலை 724 வினாடிகளும், இரண்டாம் நிலை 324 வினாடிகளும் எஞ்சின் சோதனை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web